தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில்
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை பெண் தலைமைக் காவலர் மீட்டு காப்பாற்றினார்.
தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கீழத் தெருவைச் சேர்ந் தவர் மாரியின் மனைவி வில்லம்மாள் (75). இவர் தஞ்சாவூர் பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில்
அமர்ந்திருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி ஆற்றில் இறங்கினார்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் பெரியகோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த மேற்கு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் மாதவியிடம் கூறினர். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற மாதவி ஆற்றில் இறங்கி தத்தளித்த வில்லமாளை மற்றவர்கள் உதவியுடன் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தார். மேலும், வில்லம்மாள் தற்கொலைக்கு முயன்றது குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர். ஆற்றில் தத்தளித்த மூதாட்டியை மீட்ட பெண் காவலரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.