தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கையின் போது 544 அஞ்சல் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் அரசு அலுவலர்கள், காவல் துறையினர், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு அஞ்சல் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதன்படி, இத்தொகுதியில் மொத்தம் 6 ஆயிரத்து 454 அஞ்சல் வாக்குகள் பதிவாகின.
இந்த அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை காலையில் மேற்கொள்ளப்பட்டாலும், அதன் முடிவு பிற்பகலிலேயே அறிவிக்கப்பட்டது. இதில், 544 வாக்குகள் செல்லாதவை என்பது தெரிய வந்தது.