தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) திலகவதி தலைமை வகித்தார். விதைகள் அறக்கட்டளை சக்திகாந்த் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் சன்மதி, விதைச்சான்று அலுவலர் சங்கீதா, விதை ஆய்வாளர் நவீன் சேவியர், வேளாண்மை அலுவலர்கள், உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனை திட்ட அலுவலர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.