தஞ்சாவூர் கரந்தை உமாமகேஸ்வரனார் கல்லூரியில் உலகத் தாய்மொழி தினம் நடந்தது. செயலர் சுந்தரவதனம் தலைமை வகித்தார். முதல்வர் ராஜாமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் கண்மணி வரவேற்றார். பேரணியை மருத்துவர் நரேந்திரன் தொடங்கி வைத்தார். தமிழ் உயராய்வு மைய தலைவர் ராகினி, முனைவர் சுகன்யா, முன்னாள் மாணவர் கந்தசாமி ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வக்கன்னி, மகேஸ்வரி, மாநகராட்சி கவுன்சிலர் செந்தமிழ்ச்செல்வன், உமா மகேஸ்வரனார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் எழிலரசன் நன்றி கூறினார்.