82 விநாடிகளில், 100 முறை விரலை பின்னோக்கி மடக்கி உலக சாதனை

74பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ. எஸ். ஏ. தெட்சிணாமூர்த்தி. சமூக சேவகரான இவருக்கு மனைவியும், திருமணம் ஆன ஒரு மகளும் உள்ளனர். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கத் தலைவராகவும் உள்ளார்.  


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தனது இடது கை ஆள்காட்டி (தேர்தல் மை வைக்கும்) விரலை பின்பக்கமாக, 100 வினாடிகளில் 100 முறை திருப்பி சாதனை படைக்க பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.  இந்நிலையில், பேராவூரணி தனம் திருமண இன்று உலக சாதனை முயற்சி நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க மாநிலத் தலைவரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி. ஆர். ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.  லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் சவரிராஜன், இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கலையரசி, தலைமை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் சக்திவேல், தலைமை ஆலோசகர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.  
இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட குறைவாக, அதாவது 82 வினாடிகளில் 100 முறை விரலை பின்னோக்கி, மடக்கி உலக சாதனை படைத்தார்.  
பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து உலக சாதனை நிறுவனத்தின் சார்பில், உலக சாதனைக்கான சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி