க்யூட் நுழைவுத் தேர்வுக்கு ஜன. 24 வரை விண்ணப்பிக்கலாம்

65பார்த்தது
க்யூட் நுழைவுத் தேர்வுக்கு ஜன. 24 வரை விண்ணப்பிக்கலாம்
மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முது நிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, வரும் கல்வியாண்டில் (2024- 25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புக்கான
க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு
மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள்
https: //pgcuet. samarth. ac. in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24 க்குள் விண்ணப்பிக்க
வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன. 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீல னைக்கு பின்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் மார்ச் 7-ம் தேதி வெளியிடப்படும். தேர்வுக் கால அட்டவணை, விண்ணப் பக்கட்டணம் உள்ளிட்ட விவரங் களை /www. nta. ac. in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta. ac. in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி