வயலில் சாய்ந்து விழும் நிலையில் மின்சார கம்பம்

69பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பொன்மான் மேய்ந்தநல்லூர், நேஷனல் ஹைவேஸ் சாலை அருகில் விவசாய வயலில் மின் கம்பம் ஒன்று எந்த நேரமும் வயலில் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும்  வகையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் 100-க்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மின்சாரம் செல்லும் கம்பங்கள் உதிர்ந்து கம்பிகள் அறித்து வெளியே தெரிவதுடன் எந்த நேரம் வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் இருந்து வருகிறது. ஆபத்தான நிலையில் இருந்து வரும் மின் கம்பத்தை புதிதாக மாற்றுவதற்க்காக, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு உதிர்ந்து காணப்படும் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி