தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன், பெருங்கரை பாப்பாத்தியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது இதனை முன்னிட்டு பக்தர்கள், மற்றும் கிராம வாசிகள் சார்பில் அகரமாங்குடி பொய்கை ஆற்றங்கரையில் இருந்து மேள, தாளத்துடன், கோலாட்டம் கும்மி ஆட்டத்துடன் புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி, பெருங்கரை கிராம வாசிகள் செய்து இருந்தனர்.