இராமானுஜபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்

51பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், இராமானுஜபுரம்,  
மேலகபிஸ்தலம், அலவந்திபுரம், சத்தியமங்கலம், உமையாள்புரம், திருமண்டங்குடி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஊராட்சி செயலாளர் பாரதிதாசன் தலைமை வகித்தார், பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வைத்தனர் முகாமில் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், முன்னாள்  மாவட்ட கவுன்சிலர் கோவி அய்யாராசு, மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்த், விஜயன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபாகரன், சுதா, செல்வராஜ், சீனிவாசன், காமராஜ் துணை வட்டாட்சியர் பிரபு, வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, கிராம நிர்வாக அலுவலர் திவ்யா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பன், முருகேசன் ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன், முதுநிலை வருவாய் வரதராஜன், உதவியாளர் ராஜா , ஊராட்சி செயலாளர் சுகுணா, மற்றும்   பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். முன்னதாக ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.   முகாமில் பயனாளி ஒருவருக்கு காது கருவி வழங்கப்பட்டது முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி