கல்லணைக் கால்வாயில் தேர்தலுக்கு முன்னரே தூர்வாரும் பணி..?

68பார்த்தது
கல்லணைக் கால்வாயில் தேர்தலுக்கு முன்னரே தூர்வாரும் பணி..?
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னதாக காவிரி டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட ஆறுகள் பாசன வாய்க்கால்கள் இப்போதே ஈரப்பதம் இன்றி காயத் தொடங்கி விட்டது. ஜூன் மாதம் திறக்கப்படும் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை வரை சென்று சேர வேண்டும் என்றால் தற்போதே தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதனை காரணம் காட்டி தூர்வாரும் பணிகள் ஒத்திவைக்கப்படும் நிலை உள்ளது. தேர்தல் நடத்திய விதி முறைகள் மே வரை அமலில் இருக்கும் என்பதால் தூர் வாருவது தள்ளிப் போனால் நிலமை மோசமாகும் என விவசாய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜனவரிக்கு முன்பாகவே ஆறுகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் வாய்க்கால்கள் காய்ந்து காணப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் 35, 000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுகள் வடிகால் வாய்க்கால்கள் வாய்க்கால்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தூர்ந்து போகும் வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. தற்போது தமிழக பட்ஜெட்டில் டெல்டாவில் 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 530 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணிகளை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி