ஓரத்தநாட்டை அடுத்துள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேலன் (வயது 80). இவர் கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றிருந்தார். நேற்று வியாழக்கிழமை காலை செந்தில்வேலனின் உறவினர் சத்தியமூர்த்தி, செந்தில்வேலனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியமூர்த்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.
அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த ராமநாதன் செட்டி (65) என்பவரது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.