திருநாகேஸ்வரத்தில் அதிமுக தெற்கு ஒன்றிய ஆலோசனை கூட்டம்

575பார்த்தது
திருநாகேஸ்வரத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்




திருவிடைமருதூர் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் திருநாகேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வருகிற 24 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பாரதிமோகன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தவமணி, ஒன்றிய அவைத் தலைவர் தங்கவேல், திருநாகேஸ்வரம் நகர செயலாளர் வைரவேல், மாவட்ட பிரதிநிதி வடிவேல், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ராஜேந்திரன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சிவகுமார்
மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி