கும்பகோணம் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்மநபர்

82பார்த்தது
கும்பகோணம் அருகே இரவு நேரத்தில் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது.


கும்பகோணம் அருகே மேலக்காவேரி பள்ளிவாசல் தெரு பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் உலா வந்தது டார்ச் அடித்து வீடுகளை நோட்டமிட்டு செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீடுகளை வெளியே இருந்தவாறு கண்காணித்த அந்த மர்ம நபர், உள்ளே சென்றும் நோட்டமிட்டுள்ளார்.

அவரைக் கண்டு அங்கிருந்த நாய் ஒன்று தொடர்ந்து குறைத்ததால் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருவதோடு பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

எனவே கும்பகோணம் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி