தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நன்றி தெரிவித்தார்.
இதில் முதற்கட்டமாக 15 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜா தெரிவித்தார்.