அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது

82பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் அரசு பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இப்பயிற்சியானது தமிழக பள்ளிகல்வித் துறையினால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள சங்கரன்கோவில் காந்திநகர் கராத்தே அகாடமியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் ஏராளமான மாணவிகள் அதிக ஈடுபாட்டு பங்கெடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி