மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை கண்டித்து தமிழக முழுவதும் திமுக கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரப்பகுதியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தலைமையிலான திமுக-வினர் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தமிழகத்தில் ஹிந்தி மொழியை கொண்டுவர துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டிக்கும் வகையிலும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடையே மத்தியஅரசுக்கு எதிராக வழங்கினர்.
காலையில் சங்கரன்கோவில் ரயில்வே நிலையத்தில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துக்களை அழித்த நிலையில் மாலையில் நகர் முழுவதும் திமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.