தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
குற்றால சீசன் களைகட்டி வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாரித்து காணப்படுவதால் குற்றாலம், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.