தென்காசி: சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்பி

68பார்த்தது
போதை பொருளை தடுக்கும் பொருட்டு நேற்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலைமையில் 08 கிலோமீட்டர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் சோதனை சாவடி மற்றும் வாகன தணிக்கை செய்து தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் இணைந்து பனவடலிசத்திரம் காவல் நிலையத்திலிருந்து மேல நீலிதநல்லூர் கிராமம் வரை சுமார் 08 கிலோமீட்டர் தொலைவினை நேற்று
மிதிவண்டியில் சென்றனர்.

பொதுமக்களிடையே போதைப் பொருட்களுக்கு அடிமையா வதன் விளைவுகள் குறித்தும், போதை பொருள் உடல் நலத்திற்கு எவ்வாறு கேடு விளைவிக்கும் என்பது குறித்தும், உடல் நலத்தை உடற்பயிற்சி மூலம் எவ்வாறு பேணி காக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

பின்பு கிராம மக்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப் பாளர் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்து இனி போதை பொருளுக்கு யாரும் துணை போக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மிதிவண்டியில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி