உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நேற்று இரவு வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், சுரண்டை அரசு கல்லூரி ஆண்கள் விடுதி மற்றும் குலையனேரி பகுதியில் தெரு விளக்குகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்.
பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் களஆய்வு மேற்கொண்டார்.