தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது,. வாக்குபதிவு இயந்திர பாதுகாப்பு அறையை நேற்று (செப்.,30) அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்த நிலையில், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.