ரூ. 13, 000 லஞ்சம் பெற்ற  ஈச்சந்தா கிராம நிர்வாக அலுவலர் கைது

1913பார்த்தது
ரூ. 13, 000 லஞ்சம் பெற்ற  ஈச்சந்தா கிராம நிர்வாக அலுவலர் கைது
சங்கரன்கோவில் அருகே உள்ள ஈச்சந்தா கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் விஜயகுமார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் கேட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து கருப்பசாமி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் 13ஆயிரத்தை கருப்பசாமியிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரிடம் நேற்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர்  கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர்.

ஆனால் லஞ்ச ஒழிப்பு துறையினர் விஜயகுமாரை கைது செய்யும் போது லஞ்சப் பணம் ரூபாய் 13 ஆயிரத்தை தூக்கி வீசி எறிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூபாய் 13 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்ற முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரின் வீட்டில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பால் சுதிர் தலைமையில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி