தன்னுடைய ரசிகரான ரேணுகா ஸ்வாமியை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் கன்னட பட ஹீரோ தர்ஷனுக்கு திரை காவலர்களால் சகல வசதிகளும் சிறைக்குள் செய்து கொடுக்கப்பட்டதாக ஏழு துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் அவர் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், நடிகர் தர்ஷன் கேங்ஸ்டர் தர்மாவுடன் சிறைக்குள் இருந்து வீடியோ கால் பேசும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.