முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.. பரிசுகள் வழங்கல்

85பார்த்தது
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.. பரிசுகள் வழங்கல்
தென்காசி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி களில் வெற்றி பெற்ற சுமார் 2500க்கும் மேற்பட்ட பள்ளி,   கல்லூரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு  பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று(அக்.1) தென்காசியில் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வெற்றி பெற்றவர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர்,   அமர் சேவா சங்க நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி