தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்

56பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கிராம சபை கூட்டம் (02. 10. 2024) காந்தி ஜெயந்தி அன்று முற்பகல் 11. 00 மணிக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை (2023-24), தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம். ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர். இ ஆ. ப. அவர்கள் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி