தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் பரதன் (25). தாரை தப்பட்டை குழு நடத்திவரும் இவா், ஆலங்குளம் பேரூராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக இருந்தாா்.
நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி - ஆலங்குளம் சாலையில் நடந்து சென்ற அவா், பைக்கில் வந்த உறவினரான மகாராஜன் (28) என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றாராம்.
தொட்டியான்குளம் கரைப் பகுதியில் முன்னால் சென்ற பேருந்தை பைக் முந்த முயன்றாராம். அப்போது, பேருந்தின் பக்கவாட்டில் பைக் உரசி கீழே விழுந்ததில், மகாராஜான் லேசான காயமடைந்தாா்.
பலத்த காயமடைந்த பரதனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.