சிலிண்டர் வெடித்த விபத்தில் இளம்பெண் பலி

85பார்த்தது
சிலிண்டர் வெடித்த விபத்தில் இளம்பெண் பலி
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள லட்சுமி பார்க் சொசைட்டியில் இன்று (ஜூன் 21) அதிகாலை கோர விபத்து நடந்துள்ளது. வீட்டில் இருந்த இ-பைக் வெடித்து சிதறியதில் தீ பரவியது. இதனால், வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இந்த கோர விபத்தில் மஹிமா (18) என்ற இளம்பெண் உயிரிழந்தார். மேலும், வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மஹிமாவின் தாய் சம்பா சிர்வி (42), தந்தை டோலராம் சிர்வி (46), உடன்பிறந்தவர்கள் தேவிகா (14), சிராக் (8) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி