விவசாயிகள் மீது புகை குண்டு வீச்சு - எல்லையில் பதற்றம்

83பார்த்தது
விவசாயிகள் மீது புகை குண்டு  வீச்சு - எல்லையில் பதற்றம்
டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டுகளை காவல் துறையினர் வீச தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேணியாக செல்லும் விவசாயிகள் மீது சரமாரியாக கண்ணீர் புகை குண்டு வீசப்படுகிறது. 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தீவிரமடைகிறது. இதனால் டெல்லி எல்லையில் போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி