விழுப்புரம் - கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 195 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. அங்கு சாதாரண நாட்களில் 4 கோடி ரூபாய் வரை மது விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாடு காரணமாக, கடந்த அக்.26ஆம் தேதி 4 கோடியே 69 லட்சம் ரூபாய்க்கும், மாநாடு தினத்தன்று சுமார் 5 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன