பாஜகவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை என மநீம கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மநீம வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "திமுகவின் மிரட்டலால் தான் கமல்ஹாசன் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை துறந்ததாக ஆளுநர் பதவியை பறிகொடுத்து நிற்கும் தமிழிசை சௌந்தரராஜன் அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். கமல்ஹாசன் மிரட்டலுக்கு அஞ்சுபவரும் அல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.