ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிலவிய வெப்பத்தைத் தணிக்கும் வகையில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (ஏப்ரல் 2) தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழக மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.