தமிழக தியேட்டர்களை மூடப்போவதாக எச்சரிக்கை

57பார்த்தது
தமிழக தியேட்டர்களை மூடப்போவதாக எச்சரிக்கை
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்கள் இழுத்து மூடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 28 நாட்களுக்கு உள்ளாகவே, ஓடிடி-யில் வெளியாகி விடுவதன் காரணமாக மக்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஓடிடியில் வெளியிடும் தேதியை தள்ளிப்போடவேண்டும் இல்லையென்றால் திரையரங்குகள் அனைத்தையும் மூடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி