5 மாநிலங்களில் விசிக போட்டி - திருமாவளவன் அறிவிப்பு

78பார்த்தது
5 மாநிலங்களில் விசிக போட்டி  - திருமாவளவன் அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் விசிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று, தங்கள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்கக் கோரி மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் ஆணையர் யாரையும் பார்க்க இயலவில்லை. சின்னம் வழங்கும் பிரிவில் மனுவை சமர்ப்பித்துள்ளோம். விசிகவுக்கு சுயேட்சை சின்னத்தில் இருந்து, பானை சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளோம். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி