பாராளுமன்றத்தில் நம்மவர் - பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டிய ம.நீ.ம

53பார்த்தது
பாராளுமன்றத்தில் நம்மவர் - பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டிய ம.நீ.ம
தமிழக மக்களின், அடிமட்ட சாமானியனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க நம்மவரின் கருத்தை வலுப்படுத்துவோம் என்ற வாசகங்களுடன் மக்கள் நீதி மய்யம் 7 ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. கமல் கண்டிப்பாக திமுக கூட்டணியில் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், இந்த சுவரொட்டிகள் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் இரண்டு நாட்களில் நல்ல செய்தி சொல்வேன் என கமல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி