செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் வேளாண் பட்ஜெட் - டிடிவி தினகரன்

62பார்த்தது
செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் வேளாண் பட்ஜெட் - டிடிவி தினகரன்
இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எண்ணற்ற நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, அந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்ததோடு, வேளாண் குடிமக்கள் மீது சிறிதளவும் அக்கறையில்லாத வெற்று அறிக்கையை வேளாண் பட்ஜெட் எனும் பெயரில் 4வது ஆண்டாக இன்று தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசால் டெல்டா பகுதிகளில் பயிரப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகியதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி