இபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரால் பரபரப்பு

64பார்த்தது
இபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரால் பரபரப்பு
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கார் உள்ளே சென்ற போது, மர்ம நபரும் உள்ள நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை பழனிசாமியின் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த நபரை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி