தமிழகத்தின் முதல் பெண் அரசுப் பேருந்து நடத்துனர் நியமனம்

1070பார்த்தது
தமிழகத்தின் முதல் பெண் அரசுப் பேருந்து நடத்துனர் நியமனம்
மதுரை, கே.புதூரைச் சேர்ந்த தம்பதிகள் பாலாஜி - ரம்யா(35). பாலாஜி, மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக வேலை பார்த்தவர். இவர் கொரோனாவில் உயிரிழந்த நிலையில் குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. குழந்தைகளுடன் செய்வதரியாது தவித்த நிலையில் கருணை அடிப்படையில் போக்குவரத்துக் கழகத்தில் தனக்கு வேலை தருமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு மனு எழுதியுள்ளார். இந்த மனுவை பரிசீலித்த அரசு அவரது கணவர் பணியாற்றிய போக்குவரத்துக்கு வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்தில் ரம்யாவுக்கு நடத்துனர் பணி வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுப் போக்குவரத்து கழகதின் முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையையும் ரம்யா பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி