சென்னையில் யாசகம் பெறுபவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இல்லம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், விருப்பமுள்ள தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30-01-2025 க்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.