திண்டுக்கல் என்ற உடனேயே நம் நினைவுக்கு முதலில் வருவது பூட்டு தான். இங்கு தயாரிக்கப்படும் பூட்டுகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. தமிழகத்தில் உள்ள பல கோயில்களின் வாசல்கள் திண்டுக்கல் பூட்டு கொண்டுதான் பூட்டப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு பழமையான இந்த பூட்டுகளை செய்வதற்கு கூட தற்போது ஆள் இல்லை. பூட்டு தொழிலே அழியும் நிலையில் உள்ளது. விலை வாசி உயர்வு, சந்தைப்படுத்துதல் ஆகிய காரணங்களால் தொழிலை மேம்படுத்த முடியாமல் நலிவடைந்த தொழிலாக இது மாறி உள்ளது.