அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் இது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியன் மகர விண்மீன் கூட்டத்தில் சஞ்சரிக்கும் நாளை அறுவடை நாளாகவும், மகர சங்கராந்தி என்ற பெயரிலும் இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வதாக ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளது.