சென்னையில் 3ஆவது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (04.02.2025) தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் விருதுகளை வழங்குகிறார். மேலும், கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.