தமிழகத்தில், 3, 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் 15.78 லட்சம் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்து கண்டறிய இன்று (பிப். 04) முதல் மூன்று நாட்களுக்கு 'ஸ்லாஸ்' தேர்வு நடத்தப்படவுள்ளது. 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். தேர்வுக்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.