TNPSC குருப் II / IIA தேர்விற்கு பாடக்குறிப்பு இணையதளம் வெளியீடு

71பார்த்தது
TNPSC குருப் II / IIA தேர்விற்கு பாடக்குறிப்பு இணையதளம் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II/IIA (TNPSC GROUP /IIA) தேர்விற்கு 2,327காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19.07.2024 ஆகும். இந்நிலையில் 14.09.2024 அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இத்தேர்விற்கான மென்பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் பதிவு மென்பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி