ஒடிசாவை சேர்ந்தவர் அஸ்விதா சிங் (25). இவரை ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் பாபு வாடகைத் தாய்க்கு ஒப்பந்தம் செய்து தனது வீட்டில் ஒரு மாத காலமாக தங்க வைத்துள்ளார். அஸ்விதா சிங் தனது கணவருடன் அந்த வீட்டில் தங்கியுள்ளார். அஸ்விதாவை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ள ராஜேஷ் பாபு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, அஸ்விதா 9வது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளார். தற்கொலையா? அல்லது விபத்தா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.