"அவருக்கு வேறு வேலை இல்லை" - இபிஎஸ்-ஐ சாடிய சேகர்பாபு

72பார்த்தது
"அவருக்கு வேறு வேலை இல்லை" - இபிஎஸ்-ஐ சாடிய சேகர்பாபு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஆடம்பரமாக கொண்டாடியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதுகுறித்து இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “எழை எளிய மக்களுக்கு உதவி புரிவது எப்படி ஆடம்பரம் என எடுத்துக்கொள்ள முடியும்?. மஞ்சள் காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும். எங்கள் தலைவர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை வெளியிடுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி