முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறிய வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளி வைக்கக் கோரி மத்திய அரசு முறையிட்ட நிலையில், இன்று இறுதி நாள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதானார்.