தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை

52பார்த்தது
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் கோவை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ஊட்டி, நீலகிரி சுற்றுவட்டாரங்களில் கோடை மழை பெய்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி