தமிழக மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து

81பார்த்தது
தமிழக மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து
வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று காலை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அரக்கோணம் வழியாக திருவள்ளூர் நோக்கி செஞ்சிபனம்பாக்கம்- கடம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையே வந்தபோது ரயிலின் பிரேக்கிங் சிஸ்டம் கோளாறு காரணமாக பேட்டரியில் இருந்து புகை கிளம்பியது. அப்போது திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் தீயை அணைத்து ரயில் பெட்டியை சீரமைத்தனர். இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேளைக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.