தெருவுக்குத் தெரு தேநீர் பந்தல் திறக்கப்படும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

72பார்த்தது
கோடைக் காலத்தில் தண்ணீர் பந்தல்! மழைக்காலத்தில் தேநீர் பந்தல் என அதிமுக சார்பில் மக்கள் பயனடைவதை பார்த்து தடுத்து நிறுத்த துடிக்கின்றனர் மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், இராயபுரம் 48-வது வட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் கடந்த வாரம் தேநீர் பந்தல் என்னால் திறக்கப்பட்டது.

மாலை நேரங்களில் தேநீர், பால், சுக்கு காபி, பலகாரம் என பல பொருட்கள் மக்களுக்கு சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது‌. இன்றைய தினம் மக்கள் தினந்தோறும் பயனடவதை பார்த்த திமுகவினர் மாநகராட்சி அதிகாரிகளை ஏவி விட்டு தேநீர் பந்தலை அகற்ற முயற்சி செய்கின்றனர். மக்கள் பணியும் செய்யாமல் யாரையும் செய்ய விடாமலும் பார்த்து கொள்வதில் திமுக அரசு தெளிவாக உள்ளது. இதற்கு தான் மாநகராட்சி அதிகாரிகளை திமுகவின் ஒரு அணியினரை போல் பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு தொண்டாற்றும் எங்களை‌ போன்றோரை முடக்கவோ அடக்கவோ நினைப்பது முடியாத காரியம். அந்த ஒரு இடத்தில் தேநீர் பந்தல் அகற்றப்பட்டால் தெருவுக்கு தெரு தேநீர் பந்தல்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி