வாரத்தின் கடைசி நாளான இன்று
பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்து 64,406 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி102 புள்ளிகள் உயர்ந்து 19,236 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெறுகிறது. மேலும், Indian Oil Corp, Adani Green Energy உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.