கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி (வீடியோ)

60386பார்த்தது
டெல்லியின் கல்காஜி கோயிலில் மேடை சரிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். தெற்கு டெல்லி கல்காஜி கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பக்தர்கள் அமர்வதற்காக பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுமார் 1600க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 12.30 மணியளவில் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இச்சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானார். 17 பேர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி